skip to content

கீதை அறிக நீ - அத்தியாயம் 2

கீதை அறிக நீ - அத்தியாயம் 2

 • matra-sparshas tu kaunteya
  sitosna-sukha-duhkha-dah
  agamapayino ’nityas
  tams titiksasva bharata

  தோன்றழியும் ஓர்சுழலாய் துன்பமின்பம் இந்நிலையே
  ஆண்டோடும் கோடைகுளிர் அ::தொப்ப - காண்போர்தம்
  உள்ளத்து வண்ணம் இவையாம் அறிகநீ;
  தெள்ளியே நின்சலனம் தீர் (2.14)

 • nasato vidyate bhavo
  nabhavo vidyate satah
  ubhayor api drsto ’ntas
  tv anayos tattva-darshibhih

  குலையாத உண்மையெனக் கண்டார் உலகில்
  நிலையாப் பொருள்பொறை காணா - இலையென்றும்
  அவ்வழியா ஓர்பொருட்கண் மாற்றம்; அறிகநீ
  இவ்விரண்டின் தன்மைகண்டித் தெளிவு (2.16)

  பொறை - endurance

 • acchedyo ’yam adahyo ’yam
  akledyo ’sosya eva ca
  nityah sarva-gatah sthanur
  acalo ’yam sanatanah

  துண்டாகா தோயத்தே தான்கரையா செந்தழற்தீக்
  கொண்டழியா தென்றென்றும் காணுமெங்கும் பண்டேதான்
  தோன்றியும் மாறா நிலையாம்; அறிகநீ
  ஆன்மாவின் தன்மை இது (2.24)

 • bhogaisvarya-prasaktanam
  tayapahrta-cetasam
  vyavasayatmika buddhih
  samadhau na vidhiyate

  இன்பமெனும் மாயை இழுசெல்வம் இவ்விரண்டில்
  தன்மனம் சொக்கத் தனையீந்தோர் - எண்ணத்தே
  அற்றுப்போம் ஆன்மீகம் அண்டா(து); அறிகநீ
  வெற்றால் மயங்கும் மதி (2.44)

 • yavan artha udapane
  sarvatah samplutodake
  tavan sarveshu vedesu
  brahmanasya vijanatah

  கிணறூறும் நீரதனின் கூடுபயன் யாவும்
  புனலாடும் தோயமதும் பாகும் - உணர்வோடும்
  உள்ளத்தே மூமறையும் உள்ளும்; அறிகநீ
  உள்நோக்(கு) அறிவா யெனின் (2.46)

  தோயம் - நீர்நிலை; பாகும் - ஈயும்

 • durena hy avaram karma
  buddhi-yogad dhananjaya
  buddhau saranam anviccha
  kripanah phala-hetavah

  தீஞ்செயல் யாவையும் தீர்க்கும் திருப்பணியே;
  வாஞ்சையாய் கொள்சரண் வந்தென்தாள் - ஆஞ்ஞையாய்
  செய்பணியை ஆற்றிப்பின் செல்வாய்; அறிகநீ
  கைப்பலன் காண்பது வீண் (2.49)

 • karma-jam buddhi-yukta hi
  phalam tyaktva manisinah
  janma-bandha-vinirmuktah
  padam gacchanty anamayam

  எம்பணியில் மூழ்கி எமைத்தொழும் அன்பர்தம்
  இம்மை வினையாவும் இங்கிழப்பர் - சும்மையின்
  வன்மையாய் மீட்பிறவி வாரா(து); அறிகநீ
  இன்னலினி இல்லை அவர்க்கு (2.51)

 • yada te moha-kalilam
  buddhir vyatitarisyati
  tada gantasi nirvedam
  srotavyasya srutasya ca

  படர்ந்தநின் கல்விசேர் பேரறிவு, தீஅல்
  அடர்ந்தகா னொத்த மயக்கம் கடந்தப்பின்
  பார்க்கும் பொருள்நின்னை பசக்கா(து); அறிகநீ
  பார்க்கா தவையுமஃ தே (2.52)

  அல் - இருள்; கான் - காடு; பசக்குதல் - மயக்குதல்

 • sri-bhagavan uvaca
  prajahati yada kaman
  sarvan partha mano-gatan
  atmany evatmana tustah
  sthita-prajnas tadocyate

  தள்ளிப் புலனைந்தைத் தான்மயக்கும் ஆசையதை,
  உள்ளங் குவித்தே உணருங்கால் - தெள்ளிய
  ஆனந்தம் காண்பாய் அகத்துள்; அறிகநீ
  தேனொத்தப் பேரின்பம் தான் (2.55)

 • duhkhesv anudvigna-manah
  sukhesu vigata-sprhah
  vita-raga-bhaya-krodhah
  sthita-dhir munir ucyate

  துன்பமே பன்மடங்காய்த் தோன்றிடின் கண்கலங்கி
  இன்பம் வருங்கால் இனிதுவக்கும் இம்மருட்சி
  நீத்தோர்கண் வந்தமையும் ஞானம்; அறிகநீ
  காத்திடுவர் அச்சம் சினம் (2.56)

அத்தியாயம்

01 02 03 04 05 06 07 08 09 10 11
Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.