தமிழில் கஜல் வகைப்பாக்கள்
-
என்றறியுமிந்த உலகம்?
உன்னைச் சினந்தேன்; அதிர்ந்தது இந்த உலகம்,
சினங்காட்ட சிவப்பணி என்றதிந்த உலகம்;உன்னை மறந்தேன்; என் நிலை காட்ட
காவி அணிந்து வா என்றதிந்த உலகம்;உன்னைத் துறந்தேன்; என் நினவகற்ற
கருப்பு அணிந்து வா என்றதிந்த உலகம்;உன்னை உணர்ந்தேன்; என் உணர்வு வளர
பச்சை அணிந்து வா என்றதிந்த உலகம்;என்னை மறந்தோர் நிலையில் உனைக்காண, மதியனுக்கு
எதற்கு நிறம்? என்றறியுமிந்த உலகம்? -
இமையைக் கண்ட விழி
காணாதுனைக் கண்டதும் கொள்மனப் பதைப்பை, என் சொல்வேன்?
முதன்முதலாய் இமைகண்ட கண்கொளும் களிப்பை, என் சொல்வேன்?நித்தமும் என் நெஞ்சின் மூலையில் உறைந்திருந்தாயோ?
ஒற்றை நொடியில் உனை உணர்ந்த உவப்பை, என் சொல்வேன்?சட்டெனத் தெளிந்ததென் எண்ணம்; உள்ளம், உடலமெங்கும்
சக்தியை தந்தெழுப்பும் உள்ளுயிர்ப்பை, என் சொல்வேன்?உள்ளிருந்தும், உருவாய் வந்தபின்னே அறியும் இம்மதியன்
புத்தியை, கண் மறைக்கும் கருப்பை என் சொல்வேன்? -
உயிரேது? நிம்மதியே
என் வாழ்வில் நீ நுழைந்தாய், புது நிம்மதியே
உன் நினைவில் நான் இருந்தேன், அது நிம்மதியேசேராமல் என்நினைவழித்தே நீ சென்றாலும்
மாறாத என்கனவில் வாழ்கின்றாய், இது நிம்மதியேஇதயம் மூடாது கனவிலுனைப் பார்க்க
விழிநீர் வாராது உதவும் மது நிம்மதியேவீணாய் இவ்வுலகூரும் வெண்மதிக்கு வெறும்
ஊனாய் நினைவுகள், இனி உயிரேது. நிம்மதியே -
நழுவும் நினைவுகள்
அவள் நினைவையென் நெஞ்சில் பழக விடு,
இன்றைய நிலையறிந்து அழவும் விடு;கலையட்டும் தொடர் நினைவுகள்,
கள்ளாலென் மனதைக் கழுவ விடு;அந்தரத்தில் ஆடும் மதியன் நான், என்
சிந்தனையும் கோப்பையொடு நழுவும், விடு. -
தீய்ந்த தேகமும், தீராத மோகமும்...
நீயென்றும் எனைமட்டும் நினைக்க வேண்டும்
நிதமென்றன் உள்ளத்தை நனைக்க வேண்டும்வாவென்று எனையில்லம் அழைத்துன் கைசேர்
மாலையோர்நாள் என்கழுத்தில் மணக்க வேண்டும்தீயன்ன உன்காதல் தேனில் தோய்ந்தே
தவறாமல் உனதாசை தணிக்க வேண்டும்நான்கொண்ட ஆசைகளே இவையாம் போது
அடுப்புவழி என்னுயிரேன் உனக்கு வேண்டும்?
