கீதை அறிக நீ - அத்தியாயம் 3
-
yajnarthat karmano ’nyatra
loko ’yam karma-bandhanah
tad-artham karma kaunteya
mukta-sangah samacaraதொண்டாய்ச்செய் உன்றன் தொழிலனைத்தும்; அன்றெனின்
உண்டாகும் கைப்பிணையாய் உன்பணியே - கண்டார்ப்பச்
செய்வாய் செயல்யாவும் சீராய்; அறிகநீ,
உய்வாய், தளையே(து) உனக்கு (3:9) -
evam pravartitam cakram
nanuvartayatiha yah
aghayur indriyaramo
mogham partha sa jivatiமறைகூறும் தொண்டை மதியாதார் வாழ்வில்
குறையேறும், நீள்பாவங் கூடும் - அறியாதார்
பொய்ப்புலனார் மாயைவழி போவர்; அறிகநீ
மெய்யாகா(து) அத்தகையோர் வாழ்வு (3:16) -
yas tv atma-ratir eva syad
atma-trptas ca manavah
atmany eva ca santustas
tasya karyam na vidyateதன்னுள் மனம்மகிழ்தல் தன்னுள்ளம் தானுணர்தல்
என்றும் நிறைவாய்ஓர் எண்ணமிவ்வொவ் - வொன்றுமொரு
சேரஉடை யார்க்கு செயலே(து) அறிகநீ
சீரகத்தார்க்(கு) ஏது செயல் (3:17) -
naiva tasya krtenartho
nakrteneha kascana
na casya sarva-bhutesu
kascid artha-vyapasrayahதன்னை உணர்ந்தார்க்கும் தன்னிலைய றிந்தார்க்கும்
ஒன்றுமிலை தொண்டென்று வேறேதும் - என்றுமவர்
செய்யா திருக்கத் திறமே தறிகநீ
உய்யார் பிறருழைப்பால் உண்டு (3:18)
(என்றும் - எனினும்; திறம் - காரணம்) -
tasmad asaktah satatam
karyam karma samacara
asakto hy acaran karma
param apnoti purushahஎய்தும் பயன்தன்னை எண்ணாது தன்கடனாய்ச்
செய்கநீ சீராய் செயறனை - உய்வதற்குப்
பற்றற்ற வாழ்வொன்றே பாதை; அறிகநீ
பெற்றிடுவாய் அவ்வழியாற் பேறு (3:19) -
yad yad acarati sresthas
tat tad evetaro janah
sa yat pramanam kurute
lokas tad anuvartateசான்றோர் பழகுஞ் செயல்யாவுங் கண்டவை
போன்றே புரிந்திடுவர் பாமரரும் - ஆன்றபணி
கொண்டோர் அறம்வகுத்துக் காப்பர் அறிகநீ
ஒண்டிவரும் அவ்வா றுலகு (3:21) -
na me parthasti kartavyam
trisu lokesu kincana
nanavaptam avaptavyam
varta eva ca karmaniஎம்பணியென் றேதும் எமக்கிலையிம் மூவுலகில்;
எம்தேவை யென்றுமிங் கேதுமிலை - எம்நிலையில்
ஏற்கவென் றேதுமிலை என்ப தறிகநீ
ஆற்றுவம் ஆயினும் அஃது (3:22) -
utsideyur ime loka
na kuryam karma ced aham
sankarasya ca karta syam
upahanyam imah prajahசெய்யா திருப்பின்யாம் செய்பணியை, மூவுலகும்
உய்யா தொழியும், உலகத்தோர் பொய்க்கூட்டம்
ஆவதற்காய் காரணம்யாம் ஆவோம் அறிகநீ
பூவின் அமைதி படும் (3:24)
(படும் - அழியும்) -
saktah karmany avidvamso
yatha kurvanti bharata
kuryad vidvams tathasaktas
cikirsur loka-sangrahamபற்றுடன் செய்வர் பணியை, பயன்யாவும்
பெற்றிடும் எண்ணத்தாழ் பேதையர் - கற்றோரோ
உய்பயன் எண்ணா துழைப்பர்; அறிகநீ
மெய்வழிக் கீதே முறை (3:25) -
prakriteh kriyamanani
gunaih karmani sarvasah
ahankara-vimudhatma
kartaham iti manyateபொய்யுணர்வின் தாக்கத்தாற் போதையுறு பேதைமதி
செய்கைகள் யாவும் தனதென்னும் - மெய்யாக
ஆட்டுவிக்கும் ஆற்றலாம் ஆசை அறிகநீ
மூட்டுவிசை மோகவழி மூன்று (3:27) -
tattva-vit tu maha-baho
guna-karma-vibhagayoh
guna gunesu vartanta
iti matva na sajjateமெய்ப்பொருள் நன்குணர்ந்தான் மெய்செவிவாய் நாசிகண்ணென்
றுய்யான் புலன்வழியே; ஓர்பணியின் செய்நோக்கம்
பக்திபல னென்றிரு கூறாம் அறிகநீ
அக்கூ றறிவான் அவன் (3:28) -
mayi sarvani karmani
sannyasyadhyatma-cetasa
nirasir nirmamo bhutva
yudhyasva vigata-jvarahஎன்னைத் தெளிந்துபலன் எண்ணா துழைத்துநீ
முன்னின் றுரிமை முறைதவிர்த்து - மன்னுமடி
வென்றுன் பணிசெய்து வாஇன் றறிகநீ
என்றுமுன் செய்கை எனது (3:30)
மடி - சோம்பல் -
ye me matam idam nityam
anutishthanti manavah
shraddhavanto ’nasuyanto
mucyante te ’pi karmabhihதம்வழியாய் எம்மொழியைத் தாமேற்(று) அழுக்காறா(து)
எம்வழியாற் றம்பணிசெய் ஏற்புடையோர் - செம்மையுற
உய்ப்பர் தளையிலா வாழ்வ தறிகநீ
செய்பலன் நோக்காச் செழிப்பு (3:31) -
ye tv etad abhyasuyanto
nanutishthanti me matam
sarva-jnana-vimudhams tan
viddhi nastan acetasahமன்பொருமி யெம்சொல் மறுத்துழன் றெம்வழியிற்
பின்தொடரா தாரிழப்பர் பேரறிவை - முன்னுமவர்
செய்கையெவ் வொன்றுமே தொய்யும் அறிகநீ
பொய்யெனப் போகும் பொழுது (3:32)
முன்னும் - முயலும் -
indriyasyendriyasyarthe
raga-dvesau vyavasthitau
tayor na vasam agacchet
tau hy asya paripanthinauஐம்பொறிசார் பற்றுமுள மொவ்வா வெறுப்புமிவை
மெய்ம்மையுற வேண்டின் வழியுண்டாம் - உய்வாழ்வில்
மன்மயக்கு மிவ்விரண்டும் மாயை; அறிகநீ
தன்னுணர்வுக் கீதே தடை (3:34)
மெய்ம்மை - இயல்பு -
sreyan sva-dharmo vigunah
para-dharmat sv-anusthitat
sva-dharme nidhanam sreyah
para-dharmo bhayavahahசெம்மையாய் மற்றபணி செய்தலின் சேர்பிழைஆர்
தம்பணிதாம் செய்தற் றகுமென்றும் - தம்வழியில்
நின்றதிடர் ஆயினும் நன்றாம் அறிகநீ
அன்னியர் பாதை அழிவு (3:35) -
dhumenavriyate vahnir
yathadarso malena ca
yatholbenavrto garbhas
tatha tenedam avrtamசூழ்ந்திடும் நீற்புகையிற் செந்தீ மறைந்திடும்,
வீழ்மாசே ஆடி மறைத்திடும் - வாழ்கருவை
மெய்யுள் கருப்பை மறைக்கும் அறிகநீ
உய்யுயிர்க்(கு) ஆசை உறை (3:38) -
indriyani mano buddhir
asyadhisthanam ucyate
etair vimohayaty esa
jnanam avrtya dehinamநெஞ்சம் பொறியைந்து நீளறிவிம் மூன்றுமவா
தஞ்சம் அடைந்துத் தழைக்குமிடம் - மிஞ்சுமுன்
மோகம் இயல்பறிவை மூழ்த்தும் அறிகநீ
போகத்(து) உழலும் பொறி (3:40)
போகம்- இன்பம் -
indriyani parany ahur
indriyebhyah param manah
manasas tu para buddhir
yo buddheh paratas tu sahஐம்பொறியின் ஆற்றலசை யாப்பொருளின் மீநன்று;
மெய்ம்மனமோ ஐம்பொறியின் மேன்மையது - துய்யறிவோ
ஒட்டிமிகும் மன்கொள் உயர்வை அறிகநீ
பட்டறிவின் ஓங்கும் பசு (3:42) -
evam buddheh param buddhva
samstabhyatmanam atmana
jahi satrum maha-baho
kama-rupam durasadamபெற்றறி(வு), ஐம்பொறி, பேய்மனம்மூ வுங்கடந்து
முற்றும் துறந்தோர் முனைப்பொடு - கற்குமுளம்
பந்தமற பக்தியாற் பண்ப டுமறிகநீ
அந்தமில் ஆசை அறும் (3:43)
அத்தியாயம்
| 01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 |
