கீதை அறிக நீ - அத்தியாயம் 10
-
yo mam ajam anadim ca
vetti loka-maheshvaram
asammudhah sa martyesu
sarva-papaih pramucyateஆரம்ப அனாதியாய் ஆளும் பிறப்பிலியாய்
யாரெம்மை ஏற்பரோ அவ்வான்றோர் - சீரகத்தால்
சிந்தை சிதைவுறாச் செவ்வி யரறிகநீ
அந்தவினை இல்லை அவர்க்கு (10:3) -
aham sarvasya prabhavo
mattah sarvam pravartate
iti matva bhajante mam
budha bhava-samanvitahஈர்க்கும் அருள்பொருள் இவ்விரண்டின் மூலம்யாம்
பார்காண் பொருண்மூலப் பாதையாம் - சீர்நெறியைத்
தெள்ளத் தெளிவரே தெள்ளி யரறிகநீ
உள்ளத் தெமைநன் குணர்ந்து (10:8) -
mac-citta mad-gata-prana
bodhayantah parasparam
kathayantas ca mam nityam
tusyanti ca ramanti caதம்முடன் தாம்கலந்தே தெள்ளிப் புகழ்பாடி
கம்மெனும் பேரின்பம் காணுமன்பர் - தம்பணியாய்,
தொண்டெமக்(கு) ஆற்றித் தொழுவர்; அறிகநீ
உண்டவர்க்கெம் முள்ளத் திடம் (10:9)தெள்ளி - தெளிந்து; கம் - final bliss, வீட்டின்பம்
-
tesam evanukampartham
aham ajnana-jam tamah
nasayamy atma-bhava-stho
jnana-dipena bhasvataஉய்த்துணரும் தொண்டர்தம் உள்ளத்தே யாமுறைந்து
மெய்ஞானத் தீச்சுடராய் மீயொளிர்வோம் - மையிருளார்
அஞ்ஞானம் போக்கி அருள்வோம்; அறிகநீ
விஞ்சிடும் எம்தயைய வர்க்கு (10:11) -
aham atma gudakesha
sarva-bhutasaya-sthitah
aham adis ca madhyam ca
bhutanam anta eva caமெய்ஞ்ஞான ஊற்றாகி மேவும் பரமேயாம்
உய்யுயிர் உள்ளத் துறைவோம்யாம் - மெய்க்குயிராய்
ஆதிவாழ்(வு) அந்தம்யாம் ஆவோம் அறிகநீ
யாதிலும் காணியக்கம் யாம் (10:20) -
adityanam aham vishnur
jyotisam ravir amsuman
maricir marutam asmi
nakshatranam aham sasiஆதித்யர் தம்மில் அரியாவோம் பேரொளியில்
சோதிப் பிழம்பான சூரியன்யாம் - மோதியெழும்
மாருதத்தே யாமே மரீசி அறிகநீ
தாரகையுள் யாமே சசி (10:21) -
vedanam sama-vedo ’smi
devanam asmi vasavah
indriyanam manas casmi
bhutanam asmi cetanaதழைத்தோங்கும் வேதத்துள் சாமம்யாம்; வானோர்
விழைந்தேத்தும் இந்திரன்யாம் விண்கோ - பழகுபொறி
ஐந்தவற்றுள் யாமே அறிவென் றறிகநீ
உய்வோருள் யாமே உணர்வு (10:22) -
rudranam sankaras casmi
vitteso yaksha-rakshasam
vasunam pavakas casmi
meruh sikharinam ahamருத்திரருள் யாம்அரன் ரூபமிலா யட்சகுலச்
சத்திகரைக் காக்கும் தலைவன்யாம் - இத்தரையின்
எண்வசுக்க ளுள்யாம் எரிதீ அறிகநீ
விண்சேர் மலைகளுள்யாம் மேரு (10:23)சத்திகர் = தேவதூத வகையினர்
-
maharsinam bhrgur aham
giram asmy ekam aksharam
yajnanam japa-yajno ’smi
sthavaranam himalayahவலிவார் தவசியருள் மாண்பிருகு யாமே
ஒலியின் அதிர்வுகளுள் ஓம்யாம் - பலிகளின்
நாயகமாய் எம்ஜெப நாமம் அறிகநீ
மாயா நிலைப்பில்யாம் மேரு (10:25) -
sarganam adir antas ca
madhyam caivaham arjuna
adhyatma-vidya vidyanam
vadah pravadatam ahamதோன்றும் படைப்பெலாம் தோன்றித் தொடர்ந்திருந்து
மாண்டே பொருள்காணும் மூநிலையாம் - ஆன்றோர்தம்
போதனையில் மெய்யறிவும் யாமே; அறிகநீ
வாதிற் தெளியுமுண்மை யாம் (10.32) -
mrityuh sarva-haras caham
udbhavas ca bhavisyatam
kirtih srir vak ca narinam
smritir medha dhrtih ksamaஊன்றும் உயிரறுக்கும் ஊழ்யாம்; வரும்நாளில்
தோன்றும் உயிர்தன் தொடக்கம்யாம் - கன்னியருள்
பேர்பொருள் பேச்சு பொறையோ டறிகநீ
கூர்மதி நேர்நடத்தை யாம் (10:34) -
dando damayatam asmi
nitir asmi jigisatam
maunam caivasmi guhyanam
jnanam jnanavatam ahamதவறுந் தருணத்தே தண்டனையாம் வெல்வோர்
அவருளத்தே நல்லறம்யாம் ஆவோம் - செவியுணரா
மர்மத்துள் யாமாவோம் மௌனம் அறிகநீ
அர்த்தமதில் யாமே அறிவு (10:38) -
yac capi sarva-bhutanam
bijam tad aham arjuna
na tad asti vina yat syan
maya bhutam caracaramஎல்லா உயிர்களையும் ஈந்தும் நிலையேற்கும்
வல்லவிதை யாகி வளர்ப்போம்யாம் - இல்லையே
இவ்வுலகில் யாமுறையா தேதும் அறிகநீ
எவ்வொன்றின் உட்கருவும் யாம் (10:39)
