கீதை அறிக நீ - அத்தியாயம் 4
-
evam parampara-praptam
imam rajarsayo viduh
sa kaleneha mahata
yogo nastah parantapaஎம்மின்றோர் நீள்தொடராய் யோகம் தழைக்கையில்
இம்மண்வாழ் முன்மன்னர் ஏற்றனரே - உம்முன்னோர்
விட்டுத் தொலைத்தும் விலகா தறிகநீ
பட்டது போற்றென் படும் (4:2) -
paritranaya sadhunam
vinasaya ca duskritam
dharma-samsthapanarthaya
sambhavami yuge yugeநம்புமந் நல்லோர்க்கு நல்கவும் நானிலத்தே
வம்பரின் வன்மையை மாய்க்கவும் - இம்மண்
தருமம் திரும்பத் தழைக்க வுமறிகநீ
வருவம் பிரதி யுகம் (4:8) -
janma karma ca me divyam
evam yo vetti tattvatah
tyaktva deham punar janma
naiti mam eti so ’rjunaஎல்லாங் கடந்தோங்கும் என்னிலையை நன்குணர்வோர்
நில்லாப் பொதியுடல் நீங்கயிப் - பொல்லாதோர்
செல்லாப் பிறப்பொழித்துத் தேர்வர் அறிகநீ
வெல்வர் அவரேயென் வீடு -
vita-raga-bhaya-krodha
man-maya mam upasritah
bahavo jnana-tapasa
puta mad-bhavam agatahஅச்சம் சினம்பற்(று) அறுத்தோர் அடைவரெமை;
எச்சியெம் தாளடைந்தோர் ஏராளம் - மெச்சியவர்
துய்த்தரெமை எண்ணித்தம் தூய்வாழ்(வு) அறிகநீ
உய்த்தனர் அவ்வா(று) உயர்வு (4:10) -
na mam karmani limpanti
na me karma-phale sprha
iti mam yo ’bhijanati
karmabhir na sa badhyateஈர்க்கும் செயலென் றெமக்கிலை; பின்னெதிர்
பார்க்கும் பணியீன் பலனெமக்கேன் - சேர்பலனைத்
தேடார்காண் ஈங்கண் தெளிந்தோர் அறிகநீ
நாடாமற் செய்வதே நன்று (4:14) -
karmano hy api boddhavyam
boddhavyam ca vikarmanah
akarmanas ca boddhavyam
gahana karmano gatihதெள்ளுதல் வேண்டும் செயற்றனை, தேர்ந்தவற்றுள்
கொள்வதைக்கொள், அன்றெனின் கொள்ளாநில் - தள்ளியே
நிற்கவுஞ்செய் செய்யா நிலையில் அறிகநீ
கற்கஇந் நுட்பங் கடிது (4:17) -
karmany akarma yah pasyed
akarmani ca karma yah
sa buddhiman manusyesu
sa yuktah krtsna-karma-krtநிற்கா தியங்குநிலை நிலைமை இவற்றொன்றுள்
மற்றொன்றைக் காண்பான் மதியுடையான் - கற்றுழல்வான்
செய்கையெனும் மாயையவன் செய்யி னுமறிகநீ
உய்ப்பன்றன் வாழ்வில் உயர்வு (4:18) -
yasya sarve samarambhah
kama-sankalpa-varjitah
jnanagni-dagdha-karmanam
tam ahuh panditam budhahமுன்னும் முனைவிலெலாம் மோகம் தவிர்ப்பானை
என்றும் மதியாளன் என்றுரைப்பர் - மன்னறிவால்
உய்ப்பலன் நோக்கெரித்து வாழ்வான் அறிகநீ
உய்வனவன் வாழ்வில் உயர்ந்து (4:19) -
yadrccha-labha-santusto
dvandvatito vimatsarah
samah siddhav asiddhau ca
kritvapi na nibadhyateஉன்னாப் பலனா லுளம்நிறைவார், பற்றுவெறுப்
பென்றுழலா துள்ளத்(து) எரியாதார் - ஒன்றென்றே
வாழ்வொடு தாழ்வை வகுப்பார்க்(கு) அறிகநீ
ஊழ்வந் துறுத்தா உயர்வு (4:22)
உன்னாத - எண்ணாத -
tad viddhi pranipatena
pariprasnena sevaya
upadeksyanti te jnanam
jnaninas tattva-darshinahநாடு,நல் ஞானியர் நல்கிடும் ஞானவளம்;
தேடறிவை, தொண்டெலாம் செய்தவர்க்கு; - கூடுமுனை
சான்றோர் பயிற்றும்நற் சாரம்; அறிகநீ
ஆன்றோர் அடைந்த தது (4.34) -
yoga-sannyasta-karmanam
jnana-sanchinna-samsayam
atmavantam na karmani
nibadhnanti dhananjayaபலன்தேடும் நோக்கிலா பக்தியோ டையம்
இலதாக்கும் மெய்யறிவை ஏற்றுத் துலங்குவார்
எல்லையுள் ஆன்மா இயங்கும் அறிகநீ
இல்லைசெயற் பந்தம் இவர்க்கு (4:41) -
tasmad ajnana-sambhutam
hrt-stham jnanasinatmanah
chittvainam samsayam yogam
atisthottistha bharataஅறியாமை யால்வளர் ஐயங்கள் தம்மை
குறையாஉன் ஞானத்தால் கொல்வாய் - பொறிவெல்லும்
நல்லரணாம் யோக நலங்கொள்; அறிகநீ,
வெல்லஅது போதும் விரை (4:42)
அத்தியாயம்
| 01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 |
