கீதை அறிக நீ - அத்தியாயம் 5
-
sankhya-yogau prithag balah
pravadanti na panditah
ekam apy asthitah samyag
ubhayor vindate phalamபக்தியும் வாழ்வில் பலன்தேடா அந்நிலையும்
ஒத்ததெனப் பேதை உணரான் - உத்தியுடன்
ஒன்றியற்றின் பேறிரண்டாய் உய்ப்பான் அறிகநீ
நன்றீ தறிவர் நயர் (5:4)
நயர் - அறிவுடையவர் -
yat sankhyaih prapyate sthanam
tad yogair api gamyate
ekam sankhyam ca yogam ca
yah pasyati sa pasyatiசெயற்கணிக்கும் சிந்தனை சேர்நிலையை பக்தி
உயர்நிலைஆர் தொண்டாலும் உய்ப்பர் - இயல்பொக்கும்
இவ்விரண்டும் ஒர்நிலை என்பர்; அறிகநீ
செவ்வித் தெளிவர் செயல் (5:5) -
yoga-yukto vishuddhatma
vijitatma jitendriyah
sarva-bhutatma-bhutatma
kurvann api na lipyateசெய்பணியைப் பக்தியொடு செய்குணத்தார், ஐந்தொடுக்கி
உய்வழி நன்குணர்ந்த உத்தமரே மெய்யன்பர்
யார்க்கும்;எல் லாருமவர் அன்பர்; அறிகநீ
சேர்பிணைகா ணாதச் செயல் (5:7) -
naiva kincit karomiti
yukto manyeta tattva-vit
pasyan shrinvan sprsan jighrann
asnan gacchan svapan svasanகண்டுகேட் டுண்டுயிர்த்து கைதொட் டுணர்ந்திரு
கண்ணயர்ந்து மேல்முகர்ந்து காலுலவி - எண்செய்தும்
செய்திலர்தாம் என்றே தெளிவர் அறிகநீ
ஐம்புலன் ஆளும் அவர் (5:8) -
pralapan visrjan grhnann
unmisan nimisann api
indriyanindriyarthesu
vartanta iti dharayanஎண்ணத்தார் பேச்சதனோ டேற்பு விடுப்புடன்
கண்திறப்பு மூடலுமாய் காண்செயல்கள் - கொண்டுழற்றல்
ஐம்புலன்றன் போக்கென் றறிவர் அறிகநீ
தம்மை பிணைக்கா தவர் (5:9) -
yuktah karma-phalam tyaktva
shantim apnoti naisthikim
ayuktah kama-karena
phale sakto nibadhyateபலனெமக்கு நேர்ந்துப் பணிசெய்மெய் பக்தன்
துலங்கமைதி பெற்றதில் துய்ப்பான் - கலங்குமனம்
செய்பலனைத் தேடித் திரியும் அறிகநீ
பொய்ச்சுழலில் வெஃகிப் புகும் (5:12)
வெஃகுதல் - பேராசைப்படுதல் -
sarva-karmani manasa
sannyasyaste sukham vasi
nava-dvare pure dehi
naiva kurvan na karayanதன்னியல்பை தன்வயத்தே தானடக்கித் தன்மனதால்
முன்னும் செயல்மறுக்கும் மேலான்மா - ஒன்பதுவாய்
மெய்யில் மகிழ்ந்தின்பம் மேவும் அறிகநீ
செய்தல் செயத்தூண்டல் தீர்த்து (5:13) -
tad-buddhayas tad-atmanas
tan-nisthas tat-parayanah
gacchanty apunar-avrttim
jnana-nirdhuta-kalmasahஉள்,அறிவு, நம்பிக்கை ஒன்றிஅரண் என்றுபரம்
கொள்வரே தீவினைகள் கொல்வரவர் - தெண்ணிறை
ஞானத் தெளிவிது நல்கும் அறிகநீ
ஆனது மோட்சம் அது (5.17) -
ihaiva tair jitah sargo
yesham samye sthitam manah
nirdosam hi samam brahma
tasmad brahmani te sthitahஒல்காச் சமநிலையில் ஒன்றும் மனமுடையார்
வெல்வாரே தொந்தத்து வேற்றுமையை - அல்லுலகில்
மாசற்றார் என்பர் இவரே அறிகநீ
தேசுற்றார் தெய்வத் திருந்து (5:19)
தொந்தம் - Pair, couple; இரட்டை; duality
ஒல்கா - தளராத / சுருங்காத -
na prahrsyet priyam prapya
nodvijet prapya capriyam
sthira-buddhir asammudho
brahma-vid brahmani sthitahஇன்பக் களிப்பும் இலையென் வரும்வெறுப்பும்
ஒன்றென்பான் நெஞ்சம் உழம்பாதான் - முன்னமே
அண்ட பிரம்மத் தமைவான் அறிகநீ
கொண்ட அறிவின் கொடை (5:20) -
ye hi samsparsha-ja bhoga
duhkha-yonaya eva te
ady-antavantah kaunteya
na tesu ramate budhahமிக்கப் புலன்களிப்பின் மேலெழும் ஈதறிந்தே
துக்கத்தை போதர் துறந்திடுவர் - அக்களிப்பும்
தோன்றி யழியும் தொடரா தறிகநீ
ஆன்றோர் அறிவர் அது (5:22)
போதர் - புத்திமான் -
saknotihaiva yah sodhum
prak sarira-vimokshanat
kama-krodhodbhavam vegam
sa yuktah sa sukhi narahமெய்விடுமுன் வெஞ்சினம் வெஃகலிவை ஆய்ந்துத்தன்
ஐம்புலனார் ஆசை அழிப்பவனே - உய்யுலகில்
இன்பம் திளைக்க இருப்பான் அறிகநீ
நன்றமையும் வாழ்வின் நடப்பு (5:23) -
labhante brahma-nirvanam
rsayah ksina-kalmasah
chinna-dvaidha yatatmanah
sarva-bhuta-hite ratahஐயத் தெழுசெயல் அற்றுமனத் துள்ளுணர்வோ
டுய்யுலகம் ஓங்க உழைநெஞ்சும் - செய்வினை
யண்டாச் சிறப்புமுடை ஆன்றோர்க் கறிகநீ
உண்டப் பரத்தில் உயிர்ப்பு (5:25) -
bhoktaram yajna-tapasam
sarva-loka-maheshvaram
suhridam sarva-bhutanam
jnatva mam shantim rcchatiவேள்வி தவத்தால் விழையும் பலனெமக்கு
கோள்யாவும் எம்வசமே கோன்யாமே - ஆள்பதும்யாம்
எவ்வுயிர்க்கும் நண்பனெமை எண்ணத் தறிந்துநீ
கவ்வுபிணை யற்றமைதி காண் (5:29)
அத்தியாயம்
| 01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 |
