கீதை அறிக நீ - அத்தியாயம் 7
-
bhumir apo ’nalo vayuh
kham mano buddhir eva ca
ahankara itiyam me
bhinna prakritir astadhaமண்ணுலகு நீர்நெருப்பு மாருதம் வான்மனம்
எண்ணார் மதியோ டெழுமகந்தை - எண்பொருளால்
ஆனதென் செய்கையின் ஆற்றல் அறிகநீ
யானவற்றின் வித்தென் றுணர் (7:4) -
apareyam itas tv anyam
prakritim viddhi me param
jiva-bhutam maha-baho
yayedam dharyate jagatஎண்பொருளில் மன்மயங்கி எண்ணம் தொலைக்குமிம்
மண்ணுலகின் வாழ்கின்ற மாவுயிர்கள் - உண்ணடத்தும்
அவ்வுயிரும் எம்பெரும் ஆற்றல் அறிகநீ
செவ்வியத தெட்டின் சிறந்து (7:5) -
etad-yonini bhutani
sarvanity upadharaya
aham krtsnasya jagatah
prabhavah pralayas tathaபொருளருள் தேடும் பொதுவியல்பை கொண்டிங்
கொருநிலையில் எவ்வுயிரும் உண்டிவ் - விருவழிப்
பாதையின் மாறாதோர் பண்பை அறிகநீ
யாதிலும் ஆதியந்தம் யாம் (7:6) -
raso ’ham apsu kaunteya
prabhasmi sasi-suryayoh
pranavah sarva-vedesu
shabdah khe paurusam nrsuநீரார் சுவையாம் நிலவருணன் ஈயொளியாம்
சீரார் பிரணவம்யாம் செம்மறையில் - பாராழ்த்தும்
அம்பரத்தே யாமொலி ஆவோம் அறிகநீ
செம்மகட்குள் யாமே திறன் (7:8) -
punyo gandhah prithivyam ca
tejas casmi vibhavasau
jivanam sarva-bhutesu
tapas casmi tapasvisuமண்ணார் இயற்கை மணமேயாம், மீநீண்டு
விண்ணெழும் தீயதன் வெப்பமும்யாம் - கொண்டாடும்
உய்யுயிரில் யாமே உயிர்ப்பென் றறிகநீ
மெய்தவத்தார் செய்தவமும் யாம் (7:9) -
bijam mam sarva-bhutanam
viddhi partha sanatanam
buddhir buddhimatam asmi
tejas tejasvinam ahamஎல்லா உயிரின் எழுவிசையை உள்ளார்த்த
நல்லோர் விதையாமிந் நானிலத்தே - வெல்வார்கண்
மேவும் வலிமையும் யாமே அறிகநீ
ஆவோம் அறிஞர்க் கறிவு (7:10) -
balam balavatam caham
kama-raga-vivarjitam
dharmaviruddho bhutesu
kamo ’smi bharatarsabhaவெல்லும் வலியோர்கண் வேண்டுமென்ற விழைவேதும்
இல்லா வலிமையாய் யாமாவோம் - நில்லாத
யாக்கையின் இச்சையும் யாமே அறிகநீ
நோக்கின் நெறிக்கஃது நேர் (7:11) -
ye caiva sattvika bhava
rajasas tamasas ca ye
matta eveti tan viddhi
na tv aham tesu te mayiநன்நிலை பேராசை நன்றறியாப் பேதமை
என்றாய்ப் பலநிலையில் எம்மாற்றல் - ஒன்றாகி
எல்லாமாய் யாம்சுயம்(பு) எம்மை அறிகநீ
அல்லேம் பொருளதடக் கம் (7:12) -
tribhir guna-mayair bhavair
ebhih sarvam idam jagat
mohitam nabhijanati
mam ebhyah param avyayamநன்னிலை பேராசை நன்றறியாப் பேதமை
தன்னில் மயங்கித் தவிக்குமிந் நன்நிலம்
எம்மைஅம் மூவுணர்வாய் எண்ணா(து), அறிகநீ
அம்மூன்றும் ஈறிலியும் யாம் (7:13) -
daivi hy esa guna-mayi
mama maya duratyaya
mam eva ye prapadyante
mayam etam taranti teநடத்துகின்ற முக்குணங்கள் நல்கிடும் எம்சக்தி
கடத்தற் கரியதாய்க் காட்சிதரும் - அடைக்கலமாய்
எம்மை அடைந்தவர் ஏற்பர் அறிகநீ
அம்மூன்றைத் தாண்டும் அறிவு (7:14) -
catur-vidha bhajante mam
janah sukritino ’rjuna
arto jijnasur artharthi
jnani ca bharatarsabhaதுன்பத் துழல்வோர், தொடர்பலன் தேடுவோர்,
முன்னும் மதிதேர்ந்த மூதறிஞர் - என்வழி
நாடும்நல் ஞானியெனும் நால்வர் அறிகநீ
பாடுவர் என்றாள் பணிந்து (7:16) -
tesam jnani nitya-yukta
eka-bhaktir visisyate
priyo hi jnanino ’tyartham
aham sa ca mama priyahகற்றுணர்ந்த ஞானியர் காலமெலாம் நற்பக்தி
யுற்றெமை ஏத்தும் உளத்துடையார் - நற்குணத்தால்
முன்னுமவர்க் கன்பர்யாம் ஆவோம் அறிகநீ
அன்பர் எமக்கும் அவர் (7:17) -
udarah sarva evaite
jnani tv atmaiva me matam
asthitah sa hi yuktatma
mam evanuttamam gatimநல்லா ரவர்வணங்கும் நற்குணத்தால்; ஞானியரைச்
சொல்வமெமை யொத்தச் சொரூபமாய் - நல்வழியில்
ஏத்துமியல் பால்அடைவர் எம்மை அறிகநீ
மீத்தொலைவார் சீரிலக்கெம் வீடு (7:18) -
bahunam janmanam ante
jnanavan mam prapadyate
vasudevah sarvam iti
sa mahatma su-durlabhahவாரும் பிறப்பிலெலாம் வந்தடைய ஓர்புகலாய்
யாரெமைக் கொள்வரவர் ஈதறிவர் - காரணத்தின்
வித்தும்யாம் காண்பொருள்யாம் மெத்த அறிகநீ
அத்தையுணர் ஆன்மா அரிது (7:19) -
avyaktam vyaktim apannam
manyante mam abuddhayah
param bhavam ajananto
mamavyayam anuttamamஇல்லாது தோன்றியதே எம்நிலையென் றெண்ணுமக்
கல்லாதோர் எம்முயர்வைக் காண்கிலர் - அல்லேம்யாம்
ஆதியந்தம் என்றொடுக்கும் அமைப்பில் அறிகநீ
ஏதாதி அந்தம் எமக்கு (7:24) -
vedaham samatitani
vartamanani carjuna
bhavisyani ca bhutani
mam tu veda na kascanaஆனதையும் இன்றியல்பாய் ஆவதையும் நாளைவரும்
ஏனவையும் யாமறிவோம் எக்காலும் - பூநிறைக்கும்
எப்பிறப்பும் யாமறிவோம் என்றின் றறிகநீ
இப்புவியார் தெள்ளார் எமை (7:26) -
yesham tv anta-gatam papam
jananam punya-karmanam
te dvandva-moha-nirmukta
bhajante mam drdha-vratahமுந்தையின் றெப்பிறப்பும் முன்நிற்கும் பக்தியால்
தொந்த மயக்கம் தொலைந்தேகும் - வந்தனையால்
செய்த வினையாவும் தீரும் அறிகநீ
தொய்யா மனத்தால் தொழு (7:28) -
sadhibhutadhidaivam mam
sadhiyajnam ca ye viduh
prayana-kale ’pi ca mam
te vidur yukta-cetasahஎண்ணத் தெமையேற்போர் என்றும் அறிவரெமை
விண்வாழும் தேவராய் வேள்வியாய் - பண்படும்ஊன்
நீங்குயிரும் எம்மை நினைந்தீ தறிகநீ
ஓங்குமெமை உள்ளத் துணர் (7:30)
அத்தியாயம்
| 01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 |
