கீதை அறிக நீ - அத்தியாயம் 8
-
sri-bhagavan uvaca
aksharam brahma paramam
svabhavo ’dhyatmam ucyate
bhuta-bhavodbhava-karo
visargah karma-samjnitahஅழியாப் பரம்பொருள் அஃதே பிரம்மம்
பழகியல்பாய் ஆன்மம் பரவும் - விழைவுகளால்
உண்டாகும் ஊனுயிரிவ் வுண்மை யறிகநீ
எண்ணத் தெழுங்கர்மம் இஃது (8:3) -
adhibhutam ksaro bhavah
purushas cadhidaivatam
adhiyajno ’ham evatra
dehe deha-bhrtam varaஅழியும் இயற்கை அதிபூதம் ஆகும்
தொழப்பலவாய் ஆதிதெய்வத் தோற்றம் - உழலுடலுள்
ஓர்கருவாய் யாமியங்கும் உண்மை அறிகநீ
ஆர்ந்த அதியக்யம் யாம் (8:4)
ஆர்ந்த - நிறைந்த -
anta-kale ca mam eva
smaran muktva kalevaram
yah prayati sa mad-bhavam
yati nasty atra samsayahதம்முயிர் தம்முடலைச் சாய்த்துத் துறக்கையில்
எம்மை நினைந்துருகி ஏத்துவோர் - அம்முதலே
எல்லையிலா எம்நிலை எய்து வரறிகநீ
இல்லையே ஐயம் இதில் (8:5) -
abhyasa-yoga-yuktena
cetasa nanya-gamina
paramam purusham divyam
yati parthanucintayanஅலையெண்ணம் அஃதற் றகங்குவித்து மாறா
நிலைநெஞ்சால் எம்மை நினைத்து - கலக்கமறத்
தம்மிலக்கே நோக்கும் தரத்தார் அறிகநீ
எம்மிடம் சேர்வார் இவர் (8:8) -
kavim puranam anusasitaram
anor aniyamsam anusmared yah
sarvasya dhataram acintya-rupam
aditya-varnam tamasah parastatமுற்றும் உணர்ந்தவன் முந்தையன் மேய்ப்பவன்
வெற்றின் விதையான் விளைவிப்பான் - கற்றுமெட்டா
எண்ணத்தான் ஈறிலி யோகத் தறிகநீ
வண்ணத்தில் ஆதவன் யாம் (8:9) -
sarva-dvarani samyamya
mano hridi nirudhya ca
murdhny adhayatmanah pranam
asthito yoga-dharanamஐம்புலன்ஆர் ஆசை அறுத்தலே யோகநிலை,
மெய்க்கதவம் மூடித்தம் மென்மனதால் உய்த்துணர்ந்து
காற்றைத் தலையுட் காப்பர் அறிகநீ
ஆற்றுவர் யோகம் அறிந்து (8:12) -
om ity ekaksharam brahma
vyaharan mam anusmaran
yah prayati tyajan deham
sa yati paramam gatimயோகத் தமர்ந்துயர் ஓம்காரம் வாயசைக்க
ஏகத் தலைவன் எமைத்தொழுவோர் - போகவுடல்
அற்றுப் பரத்தை அடைவார் அறிகநீ
முற்றிலும் மெய்இம் மொழி (8:13) -
mam upetya punar janma
duhkhalayam asasvatam
napnuvanti mahatmanah
samsiddhim paramam gatahஎம்மை அடைந்த எழுநிலை மாந்தர்கள்
மம்மர் மயக்குமிம் மண்வாரார் - தம்யோக
உத்தியால் எம்மை உணர்வோர் அறிகநீ
சித்தி பெறுவார் சிறந்து (8:15) -
sahasra-yuga-paryantam
ahar yad brahmano viduh
ratrim yuga-sahasrantam
te ’ho-ratra-vido janahபிரமத்தின் ஓருபகல் பேருலகின் எண்ணில்
வரும்யுகம் ஆயிர மாகும் - இரவதுவும்
அக்கணக்கில் ஆயிரம் ஆமே அறிகநீ
இக்கணக்(கு) ஒன்றே இயல்பு (8:17) -
avyaktad vyaktayah sarvah
prabhavanty ahar-agame
ratry-agame praliyante
tatraivavyakta-samjnakeதோன்றும் பொருள்யாவும் தோய்ந்த இருளுடைத்(து)
ஊன்றும் பகலில் உலகெங்கும் - வான்கருக்க,
இவ்வையம் மீளும் இருளில்; அறிகநீ
அவ்யக்தத் தோற்றம் அது (8:18) -
paras tasmat tu bhavo ’nyo
’vyakto ’vyaktat sanatanah
yah sa sarveshu bhutesu
nasyatsu na vinasyatiமாறும் நிலையிரண்டுள் மாறா நிலையொன்று
வேறாகி என்றும் விளங்கிடும் - தேறாத
மண்ணுலகம் தேய்ந்துமது மாறா தறிகநீ
திண்ணம தென்னும் தெளிவு (8:20) -
agnir jyotir ahah suklah
san-masa uttarayanam
tatra prayata gacchanti
brahma brahma-vido janahசுடுதீ, ஒளி,பகல், சுக்கில பட்சம்,
வடவான் பகலோன் வருங்கால் - படரிவைகண்
தம்முயிர் ஈந்த தகையோர் அறிகநீ
எம்மிடம் சேர்வ தியல்பு (8:24) -
dhumo ratris tatha krishnah
san-masa daksinayanam
tatra candramasam jyotir
yogi prapya nivartateகாரிருளில் காணும் கரும்புகையில் தேய்நிலவில்
சூரியன் தெற்கேகும் சூழ்நிலையில் - பாரிலுயிர்
நீப்போர் அடைவர் நிலவை அறிகநீ
பூப்பரவர் மீண்டும் பிறந்து (8:25) -
sukla-krsne gati hy ete
jagatah sasvate mate
ekaya yaty anavrttim
anyayavartate punahஉண்டே வழிகள் உலகைத் துறக்கவிரு
துண்டாய் இருளொளித் தோற்றங்கள் - கண்திறக்கும்
மீயொளியில் மாண்டவுயிர் மீளா தறிகநீ
சாயிருட்கண் மாண்ட தெழும் (8:26) -
vedesu yajnesu tapahsu caiva
danesu yat punya-phalam pradistam
atyeti tat sarvam idam viditva
yogi param sthanam upaiti cadyamஆகமத் தேர்ச்சி, அருந்தொண்டு, செய்தவ
யாகமிவை ஈன்பலன்கள் ஏராளம் - யோகத்தால்
அக்கனிகள் யாவும் அடைவாய் அறிகநீ
பக்தியே காணும் பரம் (8:28)
அத்தியாயம்
| 01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 |
