கீதை அறிக நீ - அத்தியாயம் 11
-
ihaika-stham jagat krtsnam
pasyadya sa-caracaram
mama dehe gudakesha
yac canyad drastum icchasiகாண விழைகின்ற காட்சியெலாம் என்னில்காண்
போனதும் பின்வரப் போவதும் - ஆனதெலாம்
தோன்றுமெம் ஓருருவின் தோற்றம் அறிகநீ
ஈன்றும் முழுப்பொருள் யாம் (11:7) -
na veda-yajnadhyayanair na danair
na ca kriyabhir na tapobhir ugraih
evam-rupah sakya aham nr-loke
drastum tvad anyena kuru-praviraவேதம் படியாமல் வேள்வியெதும் செய்யாமல்
பாதம் தொழாமல் பணிதவம் - ஏதுமின்றி
யாரெம் முழுவுருகண் டுற்றார் அறிகநீ
தாரிணியில் நீயொருவன் தான் (11:48) -
naham vedair na tapasa
na danena na cejyaya
sakya evam-vidho drastum
drstavan asi mam yathaநின்றளந்த எம்தோற்றம் நீகண்டாய் நன்மறையால்
குன்றாத் தவத்தால் கொடைதொழுதல் - என்றிவையால்
பெற்றதிலை இவ்வின்பப் பேறென் றறிகநீ
வெற்றுவழி ஆமோ விடை (11:53) -
bhaktya tv ananyaya sakya
aham evam-vidho ’rjuna
jnatum drastum ca tattvena
pravestum ca parantapaஇடைவிடா பக்தியோ டேத்துமன்பர் நாடும்
விடையாயெம் தோற்றம் விளங்கும் - கடையறு
முக்தியும் உண்டே முனைவோர்க் கறிகநீ
பக்தியின்பா தையே பலம் (11:54) -
mat-karma-krn mat-paramo
mad-bhaktah sanga-varjitah
nirvairah sarva-bhutesu
yah sa mam eti pandavaபலன்நோக்கா பக்தன், பணிசெய்வோன், வாழ்வின்
இலக்காய் எனையே ஏற்போன் - விலங்குயிர்க்கும்
நன்மை புரியும்நல் நண்பன் அறிகநீ
என்னை அடைவான் இவன் (11:55)
அத்தியாயம்
| 01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 |
