skip to content

கீதை அறிகநீ - அத்தியாயம் 15

கீதை அறிகநீ - அத்தியாயம் 15

-----

sri-bhagavan uvaca
urdhva-mulam adhah-sakham
ashvattham prahur avyayam
chandamsi yasya parnani
yas tam veda sa veda-vit

விண்ணோக்கும் வேர்கள், விரியும் கிளைகளெலாம்
மண்ணோக்கும் வண்ணம் மரமொன்றை - எண்ணோக்க,
ஆடுமிலை வேதயிசை ஆகும் அறிகநீ
ஏடுரைக்கும் வேதம் இது (15:1)

-----

adhas cordhvam prasrtas tasya sakha
guna-pravrddha visaya-pravalah
adhas ca mulany anusantatani
karmanubandhini manushya-loke

ஊட்டஞ்சேர் முக்குணத்தால் ஓங்கும் மரக்கிளைகள்
நீட்சிகொண்டு மேல்கீழாய் நின்றடைக்கும் - கூட்டுங்காண்
பூந்தளிரை ஐம்புலன்கள்; பூநோக் குமறிகநீ
மாந்தரிச்சை வேராய் வளர்ந்து (15:2)

-----

na rupam asyeha tathopalabhyate
nanto na cadir na ca sampratishtha
ashvattham enam su-virudha-mulam
asanga-sastrena drdhena chittva

இத்தருவின் உண்மை இயல்புணர்ந்தார் யாருமிலர்
வித்திதன் அந்தமாதி வேரெங்கும் - சித்தமுடன்
சுற்றியுள வேரறுக்கும் சூட்சம் அறிகநீ
பற்றின்மை ஆயுதம் பார் (15:3)

-----

tatah padam tat parimargitavyam
yasmin gata na nivartanti bhuyah
tam eva cadyam purusham prapadye
yatah pravrttih prasrta purani

சென்றடைவோர் மீளாத செவ்விடத்தைக் கண்டறிந்து
மன்றிப் பரமண்டி மன்றாடு - முன்னோனே
தோன்றும்யா வைக்கும் தொடக்கம் அறிகநீ
ஈன்றதவன் யாவையும் ஈங்கு (15:4)

-----

nirmana-moha jita-sanga-dosa
adhyatma-nitya vinivrtta-kamah
dvandvair vimuktah sukha-duhkha-samjnair
gacchanty amudhah padam avyayam tat

செருக்கொடு மாயை,சேர் தீதற்றோர் ஞானத்(து)
இருப்போர் பொருளாசை இன்றி - இருமனத்தால்
துன்பின்பென் றில்லார்உள் தொய்யார் அறிகநீ
இன்பரம் சேர்வார் இவர் (15:5)

-----

na tad bhasayate suryo
na sasanko na pavakah
yad gatva na nivartante
tad dhama paramam mama

சூரியனோ சந்திரனோ செந்தீயோ யாதொன்றும்
சாரா(து) ஒளிருமிடம் தான்பரம் - சேருமுயிர்
மீண்டும் பொருளுலகம் மீளா(து) அறிகநீ
யாண்டும் பரம்விடுத்(து) அஃது (15:6)

-----

mamaivamso jiva-loke
jiva-bhutah sanatanah
manah-sasthanindriyani
prakriti-sthani karshati

வேறுருவாய்க் காண்கின்ற வாழுயிர்கள் யாவுமெம்
ஓருருவின் பாகமாய் உள்ளடங்கும் - ஆறுணர்வோ(டு)
என்றுமுயிர் போராடும் இம்மண் ணிலறிகநீ
உன்மனமும் அவ்வாறில் ஒன்று (15:7)

-----

sariram yad avapnoti
yac capy utkramatishvarah
grhitvaitani samyati
vayur gandhan ivasayat

நிணமேற்ற காயத்தை நீங்குகையில் nIngungkaN ஆன்மம்
குணமேற்று வேற்றுடலிற் கூடும் - மணமேற்று
மண்ணுலவும் மாருதத்தின் மாண்பொத் ததறிகநீ
பண்பையுடல் மாற்றும் பரம் (15:8)
நிணம் = மாமிசம்

-----

srotram caksuh sparshanam ca
rasanam ghranam eva ca
adhisthaya manas cayam
visayan upasevate

செவிகளொடு கண்நாசி செந்நா தொடுகை
குவியுமிவை நெஞ்சத் திணைந்தே - இவையைந்தைப்
பெற்றிடும் ஆன்மம் பிறப்பில் அறிகநீ
உற்றிடும் இன்பத் துயர்வு (15:9)

-----

utkramantam sthitam vapi
bhunjanam va gunanvitam
vimudha nanupasyanti
pasyanti jnana-caksusah

வாடும் உடல்விடுத்து வானேகும் ஆன்மத்தை
மூடர் முழுதாய் முனைந்தறியார் - கூடதனை
மாற்றும் குணமறியார் மானு டரறிகநீ
போற்றுவார் ஞானமிகும் போழ்து (15:10)

-----

yad aditya-gatam tejo
jagad bhasayate ’khilam
yac candramasi yac cagnau
tat tejo viddhi mamakam

தங்குமிருள் தீர்க்குமருந் தன்மையுடை ஆதவனில்
பொங்குமொளி யாய்க்காண் பொருள்யாமே - திங்களிடை
சிந்துமொளி யாயாம் திகழ்வோம் அறிகநீ
செந்தீயில் யாமே சுடர் (15:12)

-----

gam avisya ca bhutani
dharayamy aham ojasa
pusnami causadhih sarvah
somo bhutva rasatmakah

எங்குநிறை கோள்களுளும் யாம்நிறைவோம் எம்மின்று
பொங்குவிசை கொண்டுழலும் போதெல்லாம் - திங்களென
மாறியாம் காக்கின்றோம் மண்ணை அறிகநீ
ஊறுவம் சாறாய் உயிர்க்கு (15:13)

-----

aham vaisvanaro bhutva
praninam deham asritah
pranapana-samayuktah
pacamy annam catur-vidham

உலகார் உயிரிலெலாம் ஊண்செரிக்கத் தீயாய்
நிலவும் பொறியாய் நிலைப்போம் - உலவிநிதம்
உள்வெளி மூச்சாய் உறைவோம் அறிகநீ
கொள்ளுணவின் நால்வகையும் கொண்டு (15:14)

-----

sarvasya caham hridi sannivisto
mattah smritir jnanam apohanam ca
vedais ca sarvair aham eva vedyo
vedanta-krd veda-vid eva caham

உள்ளோர்தம் உள்ளத்(து) உறைவோமெம் மின்றெழும்
கொள்ளறிவும் பொச்சாப்பும் கூர்நினைவும் - உள்ளுணர்வாய்
வேதத்தில் எம்மை உணர்வார் அறிகநீ
வேதாந்தம் எந்தன் விழுது (15:15)
பொச்சாப்பு = மறதி

-----

dvav imau purushau loke
ksharas cakshara eva ca
ksharah sarvani bhutani
kuta-stho ’kshara ucyate

இருநிலையுள் உள்ளதுகாண் எவ்வுயிரும்; ஆன்மம்
பொருளுலகில் பொய்க்கும் புலனால் - அருளுலகில்
மெய்ப்பொருளைக் கண்டடையும் மேன்மை அறிகநீ
பொய்ம்மாயை போக்கும் பரம் (15:16)

-----

uttamah purushas tv anyah
paramatmety udahrtah
yo loka-trayam avisya
bibharty avyaya ishvarah

பொருளாளும் பொய்ம்மைப் புகழுடையார், உள்ளத்(து)
அருளாளும் ஆழ்நெறிஆர் ஆன்றோர் - இருவரின்
வேறாம் பரமான்ம மேன்மை அறிகநீ
சாறதிம் மூவுலகின் சார்பு (15:17)

-----

yasmat ksharam atito ’ham
aksharad api cottamah
ato ’smi loke vede ca
prathitah purushottamah

முற்றுங் கடந்தோம்யாம் முன்நிற்கும் பொய்ம்மாயை
சற்றுங் கலந்துறையாச் சாறேயாம் - சற்குருயாம்
இக்குணத்தால் வேதமெமை ஏத்தும் அறிகநீ
பக்தருளம் போற்றும் பணிந்து (15:18)

-----

yo mam evam asammudho
janati purushottamam
sa sarva-vid bhajati mam
sarva-bhavena bharata

எம்மைப் பரம்பொருளாய் ஏற்றுள்ளத் தையமிலாச்
செம்மனத்தார் எல்லாம் தெளிந்திடுவர் - தம்மனத்தால்
ஒன்றியிவ் உண்மை உணர்வர் அறிகநீ
முன்னியெமை ஏத்தல் முறை (15:19)

-----

அத்தியாயம்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15
Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.