skip to content

கீதை அறிக நீ - அத்தியாயம் 16

கீதை அறிக நீ - அத்தியாயம் 16

-----

sri-bhagavan uvaca
abhayam sattva-samsuddhir
jnana-yoga-vyavasthitih
danam damas ca yajnas ca
svadhyayas tapa arjavam

அச்சமின்மை தூய்நெஞ்சம் ஆழ்மனத்து சேர்ஞானம்
மெச்சுதனம் மெய்யடக்கம் வேள்வியொ(டு) - உச்சநிலைக்
கல்விதவம் உள்ளெளிமை காண்வாழ் வறிகநீ
வல்லிறைவன் கையீன் வழி (16:1)

-----

ahimsa satyam akrodhas
tyagah shantir apaisunam
daya bhutesv aloluptvam
mardavam hrir acapalam

கொல்லாமை வாய்மை கொடுஞ்சின மின்மைபுறஞ்
சொல்லாமை நேசம் துறவமைதி - வல்லாசை
யின்மை அடக்கமோ டேற்றம் அறிகநீ
என்னன்பர் பண்பாம் இவை (16:2)
ஏற்றம் = மனத்துணிபு

-----

tejah ksama dhrtih shaucam
adroho nati-manita
bhavanti sampadam daivim
abhijatasya bharata

அகத்தொளிதல் மன்னிப்(பு) அசையா வுறுதி
மிகத்தூய்மை செய்நன்றி மீறாத் - தகைமையொடு
மெச்சிடின் உள்மயங்கா மேன்மை அறிகநீ
இச்சிறப்பெம் மன்பர்க் கியல்பு (16:3)

-----

dambho darpo ’bhimanas ca
krodhah parusyam eva ca
ajnanam cabhijatasya
partha sampadam asurim

தற்பெருமை ஆணவம் தற்செருக்கு வெஞ்சினம்
முற்றுமுளத் தன்பில் மொழியொடு - தற்குறியாய்த்
தோன்றித் திரிவரவர் தோற்றம் அறிகநீ
மான்றார் குணமிவை மாசு (16:4)
மான்றார் = மதிமயங்கியோர்

-----

pravrttim ca nivrttim ca
jana na vidur asurah
na shaucam napi cacaro
na satyam tesu vidyate

நெறியிலா நெஞ்சர்தம் நேர்காண் செயலை
அறிகிலார் அக்குணமும் ஆயார் - குறையொடு
தூய்மையின்றித் தீயொழுக்கம் துய்ப்பர் அறிகநீ
வாய்மையிலா வாழ்வவர் வாழ்வு (16:7)

-----

asatyam apratishtham te
jagad ahur anishvaram
aparaspara-sambhutam
kim anyat kama-haitukam

பொய்யென்பர் வாழுலகைப் பொய்ந்நெறியர் ஆதியிலா
உய்வென்பர் பக்தி உணர்வின்றி - செய்கையெலாம்
காமத்தில் வாய்த்த கனியென் பரறிகநீ
ஆ(ம்)மூலம் அஃதே அவர்க்கு (16:8)

-----

kamam asritya duspuram
dambha-mana-madanvitah
mohad grhitvasad-grahan
pravartante ’suci-vratah

முடிவிலா மோகத்துள் மூழ்குவர் கர்வப்
பிடிவிடாப் பொய்ந்நெறியின் பேரால் - விடிவிலா
மாயையில் உண்மயங்கி மாசேர்ப் பரறிகநீ
தேயுநெறி தம்முளத்தே தேர்ந்து (16:10)

-----

cintam aparimeyam ca
pralayantam upasritah
kamopabhoga-parama
etavad iti niscitah

ஐம்பொறியின் இச்சைகளை ஆற்றுதலே தம்வாழ்வின்
மெய்ந்நெறியாய் நம்பியதை மேற்கொள்வோர் - உய்யாந்தம்
உள்ளத்தார் ஓயா உலைச்ச லதறிகநீ
கொள்ள நிறையாக் குணம் (16:11)

-----

idam adya maya labdham
imam prapsye manoratham
idam astidam api me
bhavisyati punar dhanam

இத்தனைச் செல்வம் எமக்குள(து) ஈதினிமேல்
மொத்தமாய் என்று மிகுமென்னும் - உத்தியறி
தாகத் தலையும் தரத்தோர்க் கறிகநீ
மோகத் தலையும் மதி (16:13)

-----

asau maya hatah satrur
hanisye caparan api
isvaro ’ham aham bhogi
siddho ’ham balavan sukhi

இப்பகைவன் மாய்ந்தான்காண் என்னால் அதுபோலே
எப்பகையும் வீழயெழும் என்னாட்சி - செவ்வியன்நான்
இன்புறும் திண்ணன்நான் என்பர் அறிகநீ
தன்மதி மட்கியோர் தான் (16:14)
செவ்வியன் = நேர்மையானவன்

-----

adhyo ’bhijanavan asmi
ko ’nyo ’sti sadrso maya
yaksye dasyami modisya
ity ajnana-vimohitah

செல்வனெனைச் சூழ்ந்துறவு; திண்மையோ டின்புறுவோர்
அல்லர்காண் என்னின் அதிவலியர் - பல்விதமாய்
யாகஞ்செய்(து) ஈந்துவப்பேன் என்ப தறிகநீ
மோகத்(து) உழல்வோர் மொழி (16:15)

-----

aneka-citta-vibhranta
moha-jala-samavrtah
prasaktah kama-bhogesu
patanti narake ’sucau

ஏக்கத்தால் உட்கலங்கி எந்நாளும் பொய்ம்மாயைத்
தாக்கத்தால் கட்டுண்டு தான்கிடப்பர் - நோக்கத்தில்
இச்சையுடை மாந்தர்க்(கு) இழப்பே அறிகநீ
நச்சுடையார்க்(கு) அந்தம் நரகு (16:16)

-----

atma-sambhavitah stabdha
dhana-mana-madanvitah
yajante nama-yajnais te
dambhenavidhi-purvakam

தற்பெருமை சேர்முரடர் தம்செல்வத் தாற்செருக்(கு)
உற்றுழல்வோர் ஆணவஞ்சேர் உள்ளத்தார் - சொற்பொருட்டாய்
வேள்வியென்றே தேதோ வினைசெய் வரறிகநீ
ஆள்முறைகள் யாவும் அழித்து (16:17)

-----

ahankaram balam darpam
kamam krodham ca samsritah
mam atma-para-dehesu
pradvisanto ’bhyasuyakah

தற்பெருமை தோள்வலிமை தற்செருக் கோடாசை
உற்றெமக்கு நேராய் உரைத்திடுவோர் - ஒற்றியுடல்
உள்ளமையெம் ஆற்றல் உணரார் அறிகநீ
கள்ளமவர் நெஞ்சுட் கலந்து (16:18)

-----

tan aham dvisatah kruran
samsaresu naradhaman
ksipamy ajasram asubhan
asurisv eva yonisu

அழுக்கா றுளங்கொண்(டு) அகந்தையொடு வாழ்வில்
இழுக்குடை ஈனநிலை ஏற்றிங்(கு) - உழல்வார்க்குப்
பொல்லாப் பிறவிமிகும் போக்கை அறிகநீ
எல்லாப் பிறப்பும் இழப்பு (16:19)

-----

asurim yonim apanna
mudha janmani janmani
mam aprapyaiva kaunteya
tato yanty adhamam gatim

நீசச் செயலாற்றி நீளும் பிறவிகளில்
வாசஞ்செய் மூடரெமை வந்தடையார் - நாசமுற்று
வீழ்வரவர் மூழ்க்கும் வினையால் அறிகநீ
தாழ்வவர்க்கு நிச்சயம் தான் (16:20)

-----

tri-vidham narakasyedam
dvaram nasanam atmanah
kamah krodhas tatha lobhas
tasmad etat trayam tyajet

ஆழ்சினம் காமம் அதிஆசை இம்மூன்றும்
பாழ்நரக வாயிற் படிக்கற்கள் - வாழ்விலிவை
வாரா வழிவாழ்வர் வல்லோர் அறிகநீ
தேரார்க்(கு) இலைகாண் செழிப்பு (16:21)

-----

etair vimuktah kaunteya
tamo-dvarais tribhir narah
acaraty atmanah sreyas
tato yati param gatim

கொடுஞ்சினம் வன்காமம் கூடுமவா மூன்றைக்
கடந்தவனே தன்னிறைவைக் காண்பான் - தொடர்ந்தவன்
எண்ணத்தில் மேவுநல் ஏற்றம் அறிகநீ
பண்பட்(டு) அடைவான் பரம் (16:22)

-----

yah shastra-vidhim utsrjya
vartate kama-karatah
na sa siddhim avapnoti
na sukham na param gatim

மறைவழி வாழாது மாறித்தன் போக்கில்
முறையொன்று கொண்டு முயல்வோன் - குறையுடையான்
சேரா தவன்பாற் செழிப்பும் அறிகநீ
பாரான் அவன்அப் பரம் (16:23)

-----

tasmac chastram pramanam te
karyakarya-vyavasthitau
jnatva shastra-vidhanoktam
karma kartum iharhasi

தொண்டெதுவோ அன்றெதுவோ சொல்லும் நெறிமுறைகள்
உண்டவற்றை மாமறைகள் உள்ளுணர்த்தும் - கண்டவற்றின்
வண்ண(ம்)மனம் கொண்டோர் வளர்வார் அறிகநீ
திண்ணமவர் வாழ்வில் சிறப்பு (16:24)

-----

அத்தியாயம்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16
Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.