skip to content

கீதை அறிக நீ - அத்தியாயம் 17

கீதை அறிக நீ - அத்தியாயம் 17

-----

yajante sattvika devan
yaksha-rakshamsi rajasah
pretan bhuta-ganams canye
yajante tamasa janah

நன்னெறியர் வானவரை நம்பித் தொழுதிடுவர்;
தன்னாசை சொல்லுந் தடமேற்போர் - முன்னவராய்
வன்னரக்கர் தம்மை வணங்கு வரறிகநீ
உன்மத்தர் பேயேத்து வர் (17:4)

-----

ashastra-vihitam ghoram
tapyante ye tapo janah
dambhahankara-samyuktah
kama-raga-balanvitah

மறைசொலா வேள்விகளும் வன்தவமும் வாழ்வின்
நெறியெனப் பின்பற்றும் நெஞ்சர் - அறிவிலா
அச்செயற்றன் ஆதி அகந்தை அறிகநீ
இச்சையொடு காமம் இணைந்து (17:5)

-----

karsayantah sarira-stham
bhuta-gramam acetasah
mam caivantah sarira-stham
tan viddhy asura-niscayan

துன்புறுத்தித் தம்முடலைச் சோதித்(து) உளத்துறையும்
என்னையும வர்பொருட்டாய் இம்சித்துத் - துன்மதியால்
மூடநெறி கொண்டலையும் மூர்க்கர்க்(கு) அறிகநீ
கூடும் அசுர குணம் (17:6)

-----

aharas tv api sarvasya
tri-vidho bhavati priyah
yajnas tapas tatha danam
tesham bhedam imam shrinu

உண்ணும் உணவுவகை உண்டிங்கே முவ்விதமாய்
எண்ணும் குணத்தின் இயல்பொத்தே - கொண்ணிலையால்
தானதவ வேள்விவகைச் சார்பை அறிகநீ
ஆனதிவை மூன்றாய் அமைந்து (17:7)

-----

ayuh-sattva-balarogya-
sukha-priti-vivardhanah
rasyah snigdhah sthira hrdya
aharah sattvika-priyah

நன்னெறியர் உள்விழைந்து நாருசிக்கும் உண்பொருட்கள்
இன்பமுயிர் சக்திபலம் என்றீயும் - குன்றாத
சத்துணவும் நற்சுவைசேர் சாறும் அறிகநீ
மெத்த ருசிக்கும் விருந்து (17:8)

-----

katv-amla-lavanaty-usna-
tiksna-ruksa-vidahinah
ahara rajasasyesta
duhkha-sokamaya-pradah

ஆசைவழிச் செல்வார் அகங்களிக்கும் உண்பொருளில்
நாச்சுவைக்கும் உப்புறைப்பும் நற்சூடும் - பாசமாய்த்
தீங்கசப்பும் மீப்புளிப்பும் சேரும் அறிகநீ
ஆங்கவலம் நோய்துன்பம் ஆம் (17:9)

-----

yata-yamam gata-rasam
puti paryusitam ca yat
ucchistam api camedhyam
bhojanam tamasa-priyam

பழையது வன்சுவை பாழடைந்த பண்டம்
அழுகலொ(டு) எச்சில் அசுத்தம் - விழைந்திவற்றை
உண்ணத் தரமாய் உணர்தல் அறிகநீ
எண்ணத்(து) இருளார் இயல்பு (17:10)

-----

aphalakanksibhir yajno
vidhi-disto ya ijyate
yastavyam eveti manah
samadhaya sa sattvikah

மறைசொல் நெறிமுறை மார்கத்தே நின்றோர்
இறைபணியாய் செய்பலன் எண்ணா - முறையொடு
செய்கின்ற வேள்வி சிறக்கும் அறிகநீ
மெய்யான மேன்மை மிகுத்து (17:11)

-----

abhisandhaya tu phalam
dambhartham api caiva yat
ijyate bharata-srestha
tam yajnam viddhi rajasam

செய்பலன் தேடியதைச் சேர்க்கின்ற நோக்கோடும்
உய்த்திடும் கர்வ உணர்வொடும் - செய்கின்ற
வேள்வியால் நல்ல விளைவே தறிகநீ
ஆள்பதவா ஆங்குளத் தாம் (17:12)

-----

vidhi-hinam asrstannam
mantra-hinam adaksinam
shraddha-virahitam yajnam
tamasam paricakshate

மறைநூல் மொழியா வழிமுறையும் ஈயா
இறையுணவும் ஓதா உளமும் - குறைகொடையொ(டு)
ஒம்பா வுளமிவைஆர் வேள்வி அறிகநீ
நம்பா மடையர் நடப்பு (17:13)

-----

deva-dvija-guru-prajna-
pujanam shaucam arjavam
brahmacaryam ahimsa ca
sariram tapa ucyate

அந்தணர் தேவர் அறிஞரொடு மேலோரை
வந்திக்கும் உள்ளமும் வன்மையிலா(து) - உண்ணேர்மை
சுத்தம் பிரம்மசரி யம்தே ருமறிகநீ
தத்தம் உடம்பின் தவம் (17:14)

-----

anudvega-karam vakyam
satyam priya-hitam ca yat
svadhyayabhyasanam caiva
van-mayam tapa ucyate

உண்மையும் கேட்க உவந்ததும் நன்மைநிறை
பண்பும் நலங்குலைக்கா பேச்சுடன் - எண்ணிமறை
நோக்கைப் படிக்கும் நிலையை அறிகநீ
வாக்குத் தவங்காண் வழி (17:15)

-----

manah-prasadah saumyatvam
maunam atma-vinigrahah
bhava-samsuddhir ity etat
tapo manasam ucyate

நெஞ்சத்(து) அமைதியும் நீங்காத இன்பமும்
கிஞ்சித்தும் மாறாக் கெழுவமைதி - விஞ்சிடவே
உள்ளடக்கித் தூய்வாழ்க்கை ஓம்பல் அறிகநீ
கொள்ளும் மனத்தவமாய்க் கொள் (17:16)

-----

shraddhaya paraya taptam
tapas tat tri-vidham naraih
aphalakanksibhir yuktaih
sattvikam paricakshate

மெய்யுளம் சொல்வாக்கு மேனிவழி கொள்தவங்கள்
செய்பலன் நாடாக்கால் சீரேற்கும் - ஐயையுளம்
ஏத்தும் பொருட்டெழுமிம் மூன்றும் அறிகநீ
சாத்வீக எண்ணத் தவம் (17:17)

-----

satkara-mana-pujartham
tapo dambhena caiva yat
kriyate tad iha proktam
rajasam calam adhruvam

பொய்யாய் பெருமைக்காய்ப் போதை மதிப்புக்காய்ச்
செய்யுந் தவத்தால் சிறப்பில்லை - உய்க்குமவா
பொங்கவெழும் ராஜசம் பொய்யென் றறிகநீ
தங்கா நிலையில் தவம் (17:18)

-----

mudha-grahenatmano yat
pidaya kriyate tapah
parasyotsadanartham va
tat tamasam udahrtam

என்னை நினையா(து) எழுமூட எண்ணத்தால்
தன்னை வருத்துந் தவம்புரிந்தே - அன்னியர்தம்
சித்தமுடல் நோகச் சிதைத்தல் அறிகநீ
அத்தவம் தாமசம் ஆம் (17:19)

-----

datavyam iti yad danam
diyate ’nupakarine
dese kale ca patre ca
tad danam sattvikam smrtam

செய்பலன் நோக்காச் செயற்றனைச் சேவையாய்
மெய்யாய்த் தகுதியுடை யோர்க்குதவி - உய்யுமிடம்
போதறிந்(து) உயர்வாய்ப் புரிதல் அறிகநீ
ஈதலில் சாத்வீகம் இஃது (17:20)
உய்யும் = செய்யும்

-----

yat tu pratyupakarartham
phalam uddisya va punah
diyate ca pariklistam
tad danam rajasam smrtam

எதிர்பலனை எண்ணும் இயக்கமொடு, சேரும்
நிதிபலனை நேசிக்கும் நோக்கும் - விதியெனவே
வேண்டா விருப்பொடுசெய் தானம் அறிகநீ
யாண்டுமது ராஜசம் ஆம் (17:21)

-----

adesa-kale yad danam
apatrebhyas ca diyate
asat-kritam avajnatam
tat tamasam udahrtam

ஏற்றதாய்த் தேரா(து) இடங்காலம், வெற்றெனப்
போற்றுதலுக் கில்லாப் பொருட்களுக்காய் - ஆற்றிடுவர்
தானமதைப் போறாத் தரத்தோ(டு) அறிகநீ
ஆனதது தாமசம் ஆம் (17:22)

-----

om tat sad iti nirdeso
brahmanas tri-vidhah smrtah
brahmanas tena vedas ca
yajnas ca vihitah pura

உய்க்கும் பொருளொலிக்கும் ஓம்தத்சத் சொல்மூன்றும்
மெய்ப்பொருளை என்றும் விளக்கிநிற்கும் - செய்விதியாய்
வேதயிசை வேள்வியெழும் வேளை அறிகநீ
ஓதிவரும் சொற்கள் உணர் (17:23)

-----

tasmad om ity udahrtya
yajna-dana-tapah-kriyah
pravartante vidhanoktah
satatam brahma-vadinam

நெறிபயில்வோர் வேள்வி நெடுந்தவம் தானம்
மறைவழியே பின்பற்றும் வேளை - முறைமுதலாய்
ஓமெனுஞ்சொல் லொன்றே உரைப்பர் அறிகநீ
ஆமஃ துரைப்பார்க்(கு) உயர்வு (17:24)

-----

tad ity anabhisandhaya
phalam yajna-tapah-kriyah
dana-kriyas ca vividhah
kriyante moksha-kanksibhih

'தத்'தென்னும் சொல்லுரைத்துத் தானதவம் வேள்விதனைச்
சித்தத்துள் ஆசையறச் செய்கின்றோர் - அத்திறத்தால்
முக்திநிலை ஏற்க முயல்வர் அறிகநீ
சக்திமிகு பந்தம் தகர்த்து (17:25)

-----

sad-bhave sadhu-bhave ca
sad ity etat prayujyate
prasaste karmani tatha
sac-chabdah partha yujyate

பத்தியின் பேரிலக்காய்ப் பார்க்கின்ற மெய்யறிவே
'சத்'தெனுஞ்சொற் கூறும் தனித்துவமாம் - இத்தரத்தைக்
கற்பதற்காய் வேள்விகள் காண்பார் அறிகநீ
பெற்றார்'சத்' தென்னும் பெயர் (17:26)

-----

ashraddhaya hutam dattam
tapas taptam kritam ca yat
asad ity ucyate partha
na ca tat pretya no iha

பொய்ம்மையாம் உண்மைப் பொருளுணரா தோர்நிலையில்
செய்யும் தவம்வேள்வி தானமிவை - மெய்யில்லா
இப்பழக்கம் வீண்செயலாம்; இஃதால் அறிகநீ
எப்பிறப்பும் ஈன்பயன் இல் (17:28)

-----

அத்தியாயம்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16 17
Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.