கீதை அறிக நீ - அத்தியாயம் 18
-----
sri-bhagavan uvaca
kamyanam karmanam nyasam
sannyasam kavayo viduh
sarva-karma-phala-tyagam
prahus tyagam vicakshanah
செய்பலன் நோக்கச் செயல்துறக்கும் மேன்மைதனை
மெய்த்துறவாய் மேலோர் மொழிகின்றார் - செய்கையினால்
சேர்ந்த பொருள்துறக்கும் செவ்வி யரறிகநீ
ஆர்ந்த தியாகி அவர் (18:2)
-----
tyajyam dosa-vad ity eke
karma prahur manisinah
yajna-dana-tapah-karma
na tyajyam iti capare
பலன்தேடும் எச்செயலும் பாதகமென் றெண்ணும்
நிலையேற்(று) அறிஞரவர் நிற்பர் - சிலரவருள்
வேள்விதவம் தானம் விழைவர் அறிகநீ
ஆள்வரிவை தாம்துறவா(து) ஏற்று (18:3)
-----
yajna-dana-tapah-karma
na tyajyam karyam eva tat
yajno danam tapas caiva
pavanani manisinam
ஈகைதவம் வேள்வியெனும் இச்செயல்கள் ஏற்றவையே,
ஆகையினால் காத்திவற்றை ஆண்டொழுகு - சோகையிலா
ஆன்றோர்தம் பாவம் அழியும் அறிகநீ
மூன்றை முனையும் முகத்து (18:5)
-----
niyatasya tu sannyasah
karmano nopapadyate
mohat tasya parityagas
tamasah parikirtitah
விதித்தபணி அஃதை விடுத்தல்நன் றன்று;
மதிமயங்கி, உள்ளுழற்றும் மாயை - யதன்வலிவால்
செய்பணியைச் செய்யாது தேரும் அறிகநீ
மெய்யாய் மடமை இது (18:7)
-----
duhkham ity eva yat karma
kaya-klesa-bhayat tyajet
sa kritva rajasam tyagam
naiva tyaga-phalam labhet
தன்னுடற்குத் தீதாகித் தொய்வேற்றும் என்றெண்ணி
முன்ஆர் கடமை முனையாதான் - அன்னவனின்
செய்கைகள் ஆசைவழி செல்லும் அறிகநீ
உய்யான் பலனீன் உயர்வு (18:8)
-----
karyam ity eva yat karma
niyatam kriyate ’rjuna
sangam tyaktva phalam caiva
sa tyagah sattviko matah
செய்யும் செயலையெல்லாம் செய்தற் குரியவையாய்
மெய்யாய் மனத்துள் முன்நிறுத்தி - உய்பலனை
வேண்டா நெறியேற்கும் மேன்மை அறிகநீ
யாண்டும் சிறந்த தது (18:9)
-----
na dvesty akusalam karma
kusale nanusajjate
tyagi sattva-samavisto
medhavi chinna-samsayah
நன்னெறியை ஏற்றவர்தம் ஞானத்தால் செய்பணியில்
துன்பெனும் போது துயர்கொள்ளார் - இன்பெனினும்
பற்றற்று நின்றே பணிசெய் வரறிகநீ
எற்றைக்கும் ஐயம் இலை (18:10)
-----
na hi deha-bhrta sakyam
tyaktum karmany asesatah
yas tu karma-phala-tyagi
sa tyagity abhidhiyate
அரிதென்க எவ்வுயிர்க்கும் ஆங்கேற்ற செயலைப்
புரிகின்ற ஈர்ப்பைப் பிரிதல் - வருபலனை
ஏற்கா தியாக இயல்பே அறிகநீ
தோற்கா நிலைகாண் துறவு (18:11)
-----
anistam istam misram ca
tri-vidham karmanah phalam
bhavaty atyaginam pretya
na tu sannyasinam kvacit
வேண்டிய வேண்டா விளைவிலாச் செய்பலன்கள்
மாண்டபினும் நீளும் மருள்வோர்க்கு - யாண்டுமெழும்
இன்புதுன்பில் வேற்றுமை யென்றே தறிகநீ
முன்னுந் துறவின் முகத்து (18:12)
-----
adhisthanam tatha karta
karanam ca prithag-vidham
vividhas ca prithak cesta
daivam caivatra pancamam
நிகழுமிடம் நின்று நிகழ்த்துவோன் நீளும்
அகவிருப்போ டாக்குமுறை ஆளும் - பகவனென
இவ்வைந்தும் காரணமாம் என்றும் அறிகநீ
ஒவ்வஇவை சேரும் விளைவு (18:14)
-----
tatraivam sati kartaram
atmanam kevalam tu yah
pasyaty akrita-buddhitvan
na sa pasyati durmatih
ஐந்தின் விளைவாய் அமைந்த செயலையெல்லாம்
செய்ததவர் என்பார் சிறுமதியர் - மெய்யிதுவே
அல்லரவர் ஆழறிவார் ஆன்றோர் அறிகநீ
இல்லைதொலை நோக்கென் றிவர்க்கு (18:16)
-----
yasya nahankrto bhavo
buddhir yasya na lipyate
hatvapi sa imaû lokan
na hanti na nibadhyate
கொன்றாலும் இவ்வுலகில் கொல்லாதான் ஆகின்றான்
தன்னாசை மோகந் தனைத்துறந்தோன் - என்னாளும்
பற்றற்ற எண்ணம் பயில்வோன் அறிகநீ
பெற்றான் பிணையிலாப் பேறு (18:17)
-----
jnanam jneyam parijnata
tri-vidha karma-codana
karanam karma karteti
tri-vidhah karma-sangrahah
அறிவோ டறிபொருள் அஃதறிவோன் மூன்றும்
குறியாய்ச் செயல்தூண்டும் கோல்கள் - பொறியொடு
செய்கை செயலேற்றோன் சேரின் அறிகநீ
மெய்யாம் பணியின் விளைவு (18:18)
-----
sarva-bhutesu yenaikam
bhavam avyayam iksate
avibhaktam vibhaktesu
taj jnanam viddhi sattvikam
பல்வேறு துண்டாகிப் பல்லுயிராய் நின்றாலும்
எல்லாமோர் ஏகம் எனவெண்ணி - நல்வழியில்
முன்னிற்கும் ஞான முதிர்ச்சி அறிகநீ
என்றென்றும் சாத்வீக மே (18:20)
-----
prithaktvena tu yaj jnanam
nana-bhavan prithag-vidhan
vetti sarveshu bhutesu
taj jnanam viddhi rajasam
ஒவ்வோர் உயிர்க்குள்ளும் வெவ்வே(று) இயல்பேற்கும்
அவ்வாற்றல் என்னும் அறிவோட்டம் - இவ்வாறாய்ப்
பன்னிலையில் ஞானக்கண் பார்க்கும் அறிகநீ
இந்நிலையே ராஜசம் என்று (18:21)
-----
yat tu krtsna-vad ekasmin
karye saktam ahaitukam
atattvartha-vad alpam ca
tat tamasam udahrtam
உண்மையுறை ஞான உணர்வில்லார் ஓர்நிலையில்
கொண்டபணி பற்றிக் குழம்பிடுவர் - உண்ணோக்கம்
ஆனதுகாண் அற்பமாய் அஃதிங் கறிகநீ
ஞானத்து தாமசம் தான் (18:22)
-----
niyatam sanga-rahitam
araga-dvesatah kritam
aphala-prepsuna karma
yat tat sattvikam ucyate
பண்பட்டச் செய்முறையில் பற்றில்லா நோக்கத்தே
எண்ணில் விருப்புவெறுப் பென்றறியா(து) - உண்ணோக்கில்
செய்பலனுக் காற்றாத செய்கை அறிகநீ
மெய்யதுவே சாத்விக மாம் (18:23)
-----
yat tu kamepsuna karma
sahankarena va punah
kriyate bahulayasam
tad rajasam udahrtam
மெத்த வலிமையுடன் மீத்திறமை யோடுசிலர்
தத்தம் புலனாசை தாந்தணிக்கச் - சித்தத்தே
உச்சச் செருக்கேற் றுழைப்பர் அறிகநீ
அச்செயல் ராஜசம் ஆம் (18:24)
-----
anubandham ksayam himsam
anapeksya ca paurusam
mohad arabhyate karma
yat tat tamasam ucyate
பெருநாசம் வன்துன்பம் பேரழி வென்றாய்த்
தருசெயல் செய்தற் றவறே - உரைமறுத்து
மாயையில் இஃது வளர்ந்த தறிகநீ
தூயதிலை தாமசத் தொண்டு (18:25)
-----
pravrttim ca nivrttim ca
karyakarye bhayabhaye
bandham moksham ca ya vetti
buddhih sa partha sattviki
எதைச்செய்ய செய்யா தெதைவிடுக்க அச்சம்
எதிற்கொள்ள கொள்ளாதெஃ தேற்க - சிதைக்கும்
பந்தமெது முத்தியெதிப் பார்வை அறிகநீ
சிந்தனைஆர் சாத்விகச் சேர்ப்பு (18:30)
-----
அத்தியாயம்
| 01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
