skip to content

புன்னகைப்பூக்கள் :: பாராட்டுரை

நீங்கள் அளித்த புன்னகைப்பூக்கள் புத்தகத்தை ஒருவரி விடாமல் படித்தேன். குழந்தைகளுக்கு ஏற்றவகையில் பாடல்கள் அமையவேண்டும் என்பதிலே அதிகச் சிரத்தை எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். அதில் 95 விழுக்காடு வெற்றிபெற்றிருக்கிறீர்கள்.

எளிமை, குழந்தைகளுக்கேற்றல் சந்தம், கருத்து, இயல்பான நடை ஆகியவை கொண்டு பல பாடல்கள் அமைந்துள்ளன.
எ.கா
கல்வி, கருப்புப்பூனை, குட்டி அணில் குட்டி, வருகுது
பாடும் போடே கற்றுக்கொள்ளும் வகையில்
வண்ணங்கள், உடல் உறுப்புகள் திசைகள், வார நாட்கள்,, எதிர்மறை, கடிகாரம் ஆகியவை.
இயற்கை எழில் குழந்தைகளுக்கேற்ப இறங்கி வருகிறது
நிலா-குட்டி மேகம் அதைய்யங்கே
கொஞ்சம் முட்டிப் பார்க்கிறது.
குழந்தைப் பாடல்கள் கேள்வி பதிலாக அமைப்பது சிறப்பு என அழ. வள்ளியப்பா சொல்லுவார். அந்த வகையில் உங்கள் பாடல்கள் பல அமைந்துள்ளன.

சில குறிப்புகள்
குழந்தைப்பாடலில் குற்றியலுகரம் பார்க்க வேண்டியதில்லை என்பதை ஏற்கிறேன். ஆனால் குழந்தைப்பாடல்கள் குழந்தைகள் மனத்தில் தவறான இலக்கணப் பிரயோகத்தை ஏற்றிவிடக்கூடாது. இந்தத்தொகுதியில் பல ஒற்றுப்பிழைகளைக் காண்கிறேன். அவற்றை நீங்கள் தவிர்த்திருக்க
வேண்டும்,

குழந்தைப் பாடல்கள் புத்தகத்தை இன்னும் கொஞ்சம் பெரிய ஃபாண்டில் போட்டிருக்கவேண்டும். உங்கள் புத்தகத்தில் அங்கங்கே இடைவெளி கொடுத்திருப்பது ஒரு”ரிலீஃப்”

நிறையக் குழந்தைப்பாடல்கள் எழுதுங்கள். கதைப் பாடல்களும் எழுதுங்கள். காலத்திற்கேற்ப அறிவியல் கருத்துகள் இயல்பாக வரும் படி சில பாடல்கள் எழுதுங்கள்.

- இலந்தை

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.